9 கருத்துரைகள்
  1. நிலாமகள் முந்திக் கொண்டுவிட்டீர்கள்.

    எனக்கும் ஒரு குறுஞ்செய்தியாக மண்டையில் அடித்த ஒரு தகவல் இது.

    இப்போதெல்லாம் தொழில்நுட்பம் காரணமாக எத்தனை வேகமாக நம் எண்ணங்களைக் கொண்டுசெல்ல முடிகிறது?

    அன்னா ஹஸாரே அடுத்த பூகம்பத்தின் ஊற்றுக்கண்.

    மாறுதல்களுக்கான விதைகள் தூவப்படுகின்றன. நாம் மாற்றத்தைக் கண்டெடுத்துவிடுவோம் விரைவில்.

    ReplyDelete
  2. வணக்கம்.

    ஆம், அத்தை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பா நான்தான்.

    அற்புதமான பகிர்வு. சாட்டையடியான வார்த்தைகள். அனால், என்ன முடிவை நீங்கள் எதிர்பார்கிறீர்கள்? எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? நமது மக்கள் எந்திரங்கள் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் . இந்த உணர்வுகெட்ட எந்திரங்களை யார் உணர்ச்சிபூர்வமான மனிதர்களாக மாற்றுவது? ஆசையாகத்தான் இருக்கிறது, நமது தமிழகமும் ஒட்டுமொத்த இந்தியாவும் ஊழலற்ற நாடக ஆவதைப் பார்பதற்கு. எனது வாழ்நாளிலேயே அதை காணவேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்..

    நிற்க. இதில் நம் பங்கு என்ன?

    ReplyDelete
  3. இலவச அரசியல் எப்படியெல்லாம் நம்மை படுத்துகிறது… எப்போது உணர்வார்கள் இந்த மக்கள்? நிறைய கேள்விகள் – பதில்தான் கிடைப்பதில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் – தமிழக மக்களின் பதில் என்ன என்று.

    ReplyDelete
  4. @சுந்தர்ஜி ...

    வாங்க ஜி... தேர்தல் மும்முரத்தில் கண்ணிலேயே தென்பட வில்லை... கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? என்றாகிப் போனதா... அண்ணா ஹசாரே பற்றிய தங்கள் பதிவிற்கான ஆவலுடனிருக்கிறேன்.

    ReplyDelete
  5. kannan said...:

    அற்புதமான பகிர்வு. சாட்டையடியான வார்த்தைகள். அனால், என்ன முடிவை நீங்கள் எதிர்பார்கிறீர்கள்? எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? நமது மக்கள் எந்திரங்கள் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் . இந்த உணர்வுகெட்ட எந்திரங்களை யார் உணர்ச்சிபூர்வமான மனிதர்களாக மாற்றுவது? ஆசையாகத்தான் இருக்கிறது, நமது தமிழகமும் ஒட்டுமொத்த இந்தியாவும் ஊழலற்ற நாடக ஆவதைப் பார்பதற்கு. எனது வாழ்நாளிலேயே அதை காணவேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்..
    நிற்க. இதில் நம் பங்கு என்ன?


    கிருஷ்ணப் ப்ரியாவின் சகோதரருக்கு வந்தனம்.
    ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியான நான், வெறும் அஞ்சல்காரியாகவே இப்போதிருக்கிறேன். உங்க ஆவேசமும் ஆதங்கமும் புரிகிறதெனக்கு. உணர்வோடிருப்பதே மகிழ்வுக்குரியதான கால கட்டமிது. கைகள் அள்ளிய நீர், எரிதழல், சைக்கிள், விக்கி உலகம், அடர் கருப்பு, gmb writes போன்ற சில வலைப்பூக்களை வாசிக்க விழையுங்கள். எரிதழல் வலைப்பூவில் திரு. வாசன் அவர்கள் தந்துள்ள இணைப்பிற்கு செல்லுங்கள் . http://www.indiaagainstcorruption,org/. எனக்கு அவர் பரிந்துரைத்த பின்வரும் தளத்துக்கும் நீங்க செல்லலாம் கண்ணன்.http://savukku.net/index.php?option=com_content&view=article&id=633:2011-03-31-02-52-51&catid=9:2010-07-22-06-30-17&Itemid=7
    ஊர் கூடி தேர் இழுத்து பழக்கப் பட்டவர்கள் தானே நாமெல்லாம்...?

    ReplyDelete
  6. @வெங்கட் நாகராஜ்...

    இந்த நிலை மாறும். எதற்குமொரு எல்லை இருக்கிறதல்லவா...

    ReplyDelete
  7. மனம் நிறைந்த பாராட்டுக்கள் நிலாமகள். சுந்தர்ஜி எனக்கு இன்று இதுகுறித்து செய்தி அனுப்பியிருந்தார். நாம்தான் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டோமே. குஜராத் மாநிலமாவது இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தியிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைவோம். நாம் ஒன்று செய்யலாம் குஜராத் மாநில முதல்வருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி அந்த மாநில மக்களையும் வாழ்த்தி பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. குஜராத் முன்னேறி இருப்பதற்கு அங்கு ஏற்பட்டிருக்கும் தொழில் வளச்சி தான் காரணம். பி.ஜே.பி அரசு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது, அதற்கு ராமர் கோயிலும் , மத வெறியும் தான் முதன்மைக் கொள்கைகள்

    ReplyDelete