8 கருத்துரைகள்
  1. பல் ஈருகளுக்கு கீழே வலி இருந்தோ இல்லையோ கட்டிகள் இருந்தால் அதை மேலும் பயாப்சி மூலம் பரிசோதனை செய்வது நல்லது.

    எதிராதக்க்காக்கும் அறிவினார்க்கு இல்லை
    அதிர வருவதோர் நோய்.

    நிற்க.ஒரு ஆபரேஷன் அல்லது ப்ரோஜீஜருக்குப் பின்னே ஆண்டி பயாடிக் வேண்டுமா என்பதை நிர்ணயிப்பது பல .
    ஒன்று அந்த நபரின் இப்போதைய உடல் நிலை. கடந்த உடல் மெடிகல் ஹிஸ்டரி. இப்போது அவர் எடுத்துக்கொள்ளும் ஹைஜீன்.
    நமது நாட்டில் பரவலாக போல்யுஷன் இருப்பதால் எந்த ஒரு சர்ஜரிக்கு முன்னாலும் பின்னாலும் ஆண்டி பயாடிக் மாத்திரைகள் தருகிறார்கள். இதில் தவறு இல்லை.

    இதுவே வெளி நாடுகளில் குறிப்பாக, அமெரிக்காவில் நீங்கள் சொல்வது போல வெறும் வலி குறைக்க, வீக்கம் குறைய ப்ரூபென் மாதிரி ஆண்டி இன்ப்லமேடறி மட்டுமே தருகிறார்கள்.

    அங்கு டெட்டனஸ் கிடையாது என்கிறார்கள். ஹாஸ்பிடல் இன்பாக்ஷன் வருவது சாத்தியம்மில்லை. இங்கு அப்படியில்லையே.

    எத்தனை பல் டாக்டர்கள், தனது கொரடை ஒரு பேஷண்டுக்கு பல் தட்டி பார்த்த உடன் ஸ்டெரிலைஸ் செய்கிரார்கள் ?

    சுப்பு தாத்தா.
    www.Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  2. பரவாயில்லை நிலா மேடம். இந்தியா நூறு மடங்கு தேவலாம். இங்கே பல்வலி என்று போனால் முதலில் பிடுங்கிவிட முயல்கிறார்கள். நண்பர்கள் இங்கே வேண்டாம் இந்தியாவுக்கு போய்விடுங்கள் என்கிறார்கள்.

    ReplyDelete
  3. இப்போது வலி தேவலையா? அந்தப் பல்லை சேமித்து வைத்திருக்கலாமே? என்றோ ஒருநாள் நெய்வேலியும்கூட புத்தர் பல்லை சேமித்த இலங்கை நகர்போல் பேர் பெற்றிருக்குமே நிலா?

    ReplyDelete
  4. @sury Siva

    வாங்க சார்.

    தற்காலிகக் கொப்புளங்களுக்கு பயாப்சி வரை போக வேண்டுமா என்ன?

    ஆறாத ரணங்களுக்கும் கட்டிகளுக்கும் உடனடி தீவிர சிகிச்சை அவசியம் தான்.

    நாங்கள் பார்த்த பல் மருத்துவர் நோயாளியை ஒவ்வொரு முறை தொடும் போதும் கையுறை அணிந்து உடனுக்குடன் அதை மாற்றிக் கொண்டார். உபகரணங்களையும் உடனுக்குடன் கொதிநீரில் போட்டு அடுத்ததை எடுத்துக் கையாண்டார்.

    அவர் சொன்னதுபோலவே கட்டி கரைந்து விட்டதே.

    ReplyDelete
  5. @சிவகுமாரன்

    வாங்க சிவா... நலம் தானே?

    நீங்க சொல்வது போல் வெளி நாடுகளுக்கு இந்தியா எவ்வளவோ மேல். அவர்கள் முதலில் பிடுங்கிவிட நினைப்பது பல்லை மட்டுமல்ல நம் ஒட்டுமொத்த சொத்தையும் தான். கட்டணம் கருதியே நம் ஊருக்கு வருவது.

    நம் ஊர் சாமானியர்களுக்கே அரசு பொது மருத்துவமனை தான் பலவற்றுக்கும் நெருங்கத் தக்கதாக உள்ளது.

    ReplyDelete
  6. @மோகன்ஜி

    சின்ன வயசில் தானாக விழுந்த பல்லை வானத்துக்கு காட்டாமல் ஒளித்து மண்ணில் புதைத்த காலம் மனசில் சுவையாய்...

    எங்க ஆசான் சொல்வார், இப்பல்லாம் யாருக்குமே பல் ஆடி தானா விழரதில்லேன்னு...

    //ஒருநாள் நெய்வேலியும்கூட புத்தர் பல்லை சேமித்த இலங்கை நகர்போல் //

    ஒரு பதிவு தேற்ற முடிந்தது என்றிருந்தால், உங்க கலாய்ப்பு வேறு....

    ஒரே மாவட்டத்துக்காரங்க ஒருதாய்ப் பிள்ளைங்க போல... இல்ல ஜி...

    ReplyDelete
  7. வானம் பார்க்க க் கூடாது என விழுந்த பல்லை புதைப்பது, எனக்கும்ஒரு பால்ய நினைவு. என் கதை ஒன்றிலும் போகிறபோக்கில் சொல்லியதுண்டு(கல்யாணியை கடித்த கதை). நாமிருவரும் ஒருதாய் பிள்ளைகள் தான். சந்தேகமில்லை நிலா !

    ReplyDelete
  8. பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)

    ReplyDelete